திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன்கள் குமார் (அண்ணன்) மற்றும் எம்.ஜி.குமார் (தம்பி). இவர்களுக்குள் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

பெரியகரம் பகுதியில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த தம்பியை, பெங்களூருவுக்கு வேலைக்கு அழைக்க அண்ணன் குமார் சென்றுள்ளார். அங்கே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முடிந்து அண்ணன் வீடு திரும்பியபோது, அவரை பின்தொடர்ந்து வந்த தம்பி, பாச்சல் கிராமம் அருகே வழிமறித்து மீண்டும் சண்டையிட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணனின் கை மற்றும் இடுப்பில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினார்.

ரத்தம் சொட்டச் சொட்ட அண்ணன் குமார் அலறிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால், ரத்தம் கொட்டிய நிலையிலும் “ஆம்புலன்ஸ் வேண்டாம்” என அடம் பிடித்து அங்கிருந்து சட்டையைப் போட்டுக்கொண்டு நடந்தே சென்றார்.

பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு வலியால் துடித்தவர், வழியில் வந்த ஆம்புலன்ஸில் ஏறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.