நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த பாரத் என்பவர் அவரிடம் மது குடிக்கப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதற்கு விக்னேஷ்வர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாரத், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்தக் கொடூர தாக்குதல் குறித்து விக்னேஷ்வர் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தலைமறைவாக இருந்த பாரத்தை விரைந்து செயல்பட்டு கைது செய்த போலீசார், அவர் மீது தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். பொது இடத்தில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
