தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடர்ந்து, மருது தேசிய கழகமும் அதிமுகவுடனான தனது கூட்டணியை நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதற்காக அந்தச் சங்கத்தின் நிறுவனர் மருது பாண்டியன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுகவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் உறுதியளித்தார்.