இந்தியா மற்றும் இலங்கையில் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி விலகியதால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் மற்ற போட்டிகளில் பங்கேற்போம், ஆனால் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்பதே பாகிஸ்தானின் தற்போதைய முடிவாகும்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், தாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட எப்போதும் தயாராகவே இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நாங்கள் விளையாட மாட்டோம் என்று சொல்லவில்லை, அவர்கள்தான் மறுக்கிறார்கள். ஐசிசி முறைப்படி போட்டிகளைத் திட்டமிட்டுள்ளது, நாங்கள் டெல்லிக்குப் பிறகு கொழும்பு செல்ல ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டோம்” என்று அவர் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
