கொங்கு மக்கள் முன்னணி (கொமமு) கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொமமு இணைந்துள்ளது. முன்னதாக, திமுக தரப்பில் செந்தில் பாலாஜி இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்தத் திடீர் திருப்பமாக அக்கட்சி அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகத் தங்கள் கட்சி தீவிரமாகப் பாடுபடும் என்றும் ஆறுமுகம் உறுதியளித்துள்ளார்.
