டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Billu Baddie (@baddie.billu)

மூன்று பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த இயந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப் பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற இயந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என ஒரு தரப்பினர் நகைச்சுவையாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.