சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தனது தந்தையின் இறுதிச் சடங்கின் போது, ஒரு பெண் துக்கம் ஒருபுறம் இருக்க, செல்போனைத் எடுத்து ரீல்ஸ் (Reels) செய்துள்ள சம்பவம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சுற்றிலும் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருக்கும் வேளையில், அந்தப் பெண் கேமராவைப் பார்த்து அழுது கொண்டே வீடியோ எடுப்பது பலரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த வீடியோவை அந்தப் பெண்ணே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “உயிரற்ற உடலுக்கு முன்னால் இப்படி ஒரு நடிப்பும், விளம்பரமும் தேவையா?” என்றும், “மனித உணர்வுகளை விட இன்று சோஷியல் மீடியா கன்டென்ட் தான் முக்கியமாகிவிட்டதா?” என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டிஜிட்டல் உலகில் வாழும் நாம், துக்கமான நேரத்திலும் கேமராவைப் பிடித்துக் கொண்டிருப்பது மனிதநேயத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது எனப் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
