சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வரும்போது குழந்தை மகிழ்ச்சியில் சாலையை நோக்கி ஓடுகிறது.

 

அப்போது அந்தத் தாய்க்கு திடீரென ஏதோ நினைவு வர அவர் மீண்டும் வீட்டை நோக்கித் திரும்புகிறார். அந்தத் தருணத்தில் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அந்தக் குழந்தையின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தின்போது அந்தத் தாய் பதற்றத்தில் குழந்தையைக் காப்பற்ற முயற்சிப்பதற்கு பதிலாக தனது கைப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பினாலும் தாயின் இத்தகைய கவனக்குறைவான செயல் இணையவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் குழந்தைகளுடன் செல்லும்போது ஒரு நொடி கவனச்சிதறல் கூட எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.