இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடக்கவிருந்த இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலில், “இந்தியாவுடன் விளையாடாதது வருத்தமளித்தாலும், எனது நாட்டின் முடிவுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்” என முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். மேலும், ஐசிசி வெறும் மிரட்டல் விடுக்காமல் அனைத்து நாடுகளுக்கும் சமமான நீதியை வழங்க வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது.