ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களிடம் கடும் கேலிக்குள்ளானார். ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை ‘ஜிம்பு’ என்றும் ‘கண்டே கா கிங்’ என்றும் கிண்டல் செய்தனர்.
சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் பாபர் அசாம், இந்த ஏளனப் பேச்சுகளைக் கேட்டு மிகவும் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மறுபுறம், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியை ‘ஒரு முழுமையான ஆட்டம்’ என்று கேப்டன் சல்மான் ஆகா பாராட்டியுள்ளார்.
🚨 NO RESPECT FOR BABAR AZAM IN PAKISTAN 🚨
– Yesterday, Babar Azam scored 2(5) and eventually made fans angry 😯
Angry Fan said – “Zimbu got out. Friends, look ‘Ghante ka King’ is coming. He is the biggest fraud in Pakistan.” 😂
What’s your take 😆 pic.twitter.com/Xn2v0goIkJ
— Richard Kettleborough (@RichKettle07) February 1, 2026
“>
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டது. வரும் பிப்ரவரி 7-ம் தேதி கொழும்பில் நெதர்லாந்துக்கு எதிராகத் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளது.
