2026-ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரின் ஒரு பகுதியாக, மும்பை வான்கடே மைதானத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் மும்பை வீதிகளில் பானிபூரி சாப்பிடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
USA cricketers enjoying pani puri (golgappa) in Mumbai after the warm-up match vs India — pure desi vibes 😋 pic.twitter.com/7URxPFlgnA
— Sonu (@Cricket_live247) February 3, 2026
உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்கு முன்பாக அமெரிக்க வீரர்கள் பதற்றமின்றி, மும்பையின் கலாசாரத்தையும் உணவையும் ரசித்து வருவது விளையாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அமெரிக்க அணியில் மோனக் படேல் மற்றும் சுபம் ரஞ்சனே போன்ற இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு மும்பை மாநகரம் மிகவும் பரிச்சயமான ஒன்றாக உள்ளது.
பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு மத்தியில் கிடைத்த இடைவெளியில், சாலையோரக் கடையொன்றில் வீரர்கள் வரிசையாக நின்று பானிபூரியைச் சுவைத்த அந்தத் தருணம், அமெரிக்க அணி எவ்வளவு நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் இந்தப் போட்டியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட அமெரிக்க அணி, தற்போது இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கிறது.
