பிரபல யூடியூபர் அருண் பன்வார் தனது திருமணத்தில் 71 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 21 சவரன் தங்கத்தை ‘தானம்’ என்ற பெயரில் பெற்றது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மாதம் 25 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அவர், சட்டப்படி குற்றமான வரதட்சணையை இப்படி பகிரங்கமாக வாங்கியது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. வரதட்சணையை வெறும் ‘அன்பளிப்பு’ எனப் பெயர் மாற்றி நியாயப்படுத்துவது சமூகத் தீமையையே ஊக்குவிக்கும் எனப் பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Meet YouTuber Arun Panwar.
> bro earn 20 – 25 lakh per month from YouTube.
> Still bro take dowry in the name of "Daan" from her family 🤣
>Bro get 71 lakh rupee cash & "21 Tola" Gold. pic.twitter.com/rRlMjA6S3L— Sumit (@beingsumit01) January 31, 2026
நன்கு படித்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்துகொண்டு, இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது மற்றவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையிலும், அருண் பன்வார் இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
