கர்நாடகாவில் தனது மூன்று குழந்தைகளைத் தூக்கிலிட்டு தானும் டீசல் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்புரா தாலுகாவில் உள்ள அந்தேரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. குடும்பத் தகராறு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த இவர், தனது மூன்று குழந்தைகளையும் வீட்டில் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர் தானும் டீசல் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் லதாவின் மூன்று பிஞ்சு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றினார்.
மேலும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் குடும்பப் பிரச்சினையே இந்தப் பயங்கரமான முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
