பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, ஊரின் செல்வாக்கு மிக்க சிலர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
<a href=”http://

“>
மயானத்திற்குச் செல்லும் பாதையில் கடந்த பல ஆண்டுகளாகக் கடைகளும், கோயிலும் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தங்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

வேறு வழியின்றி, அந்த மகா தலித் குடும்பத்தினர் தங்கள் உறவினரின் உடலை பொதுச் சாலையிலேயே வைத்து எரியூட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விக்ரம் சிஹாக் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

சுமார் எட்டு முதல் பத்து ஆண்டுகளாக இந்தப் பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பது அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

ஏழைகளாகிய தங்களுக்குத் தங்குவதற்கு இடமில்லை, இப்போது இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட உரிமை இல்லையா என்று அக்கிராம மக்கள் எழுப்பியுள்ள கேள்வி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.