ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நாய்க்குட்டியை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்து, கேன் ஒன்றில் இருந்த பானத்தைக் குடிக்க வைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாய்க்குட்டி தப்பிக்க முயன்றும், மனிதாபிமானமற்ற முறையில் அதன் வாயில் அந்தப் பானத்தை ஊற்றியுள்ளனர்.

இது மதுபானமாக இருக்கலாம் எனப் பலரும் கருதிய நிலையில், அது ‘பிரிடேட்டர்’ எனும் எனர்ஜி டிரிங்க் என்று சிலர் கூறுகின்றனர்.

எதுவாக இருந்தாலும், காஃபின் மற்றும் சர்க்கரை நிறைந்த இத்தகைய பானங்கள் நாய்க்குட்டிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதால் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள், இது வைரலானதும் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக விலங்கு நல அமைப்பான ‘பால் பவுண்டேஷன்’ மற்றும் மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
<a href=”http://

“>
இந்திய சட்டப்படி (1960 விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம்), வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள், அந்த நபர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.