திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் ராட்டினம் சுற்றுவது அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் அங்கு செய்யப்படும் ஆபத்தான சாகசங்கள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்துகின்றன.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெரிய ராட்டினத்தில் பலரும் அமர்ந்திருக்க, அதை இயக்கும் இளைஞர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
ராட்டினம் கீழே வரும்போது அதன் கம்பிகளில் தொற்றிக்கொண்டு அந்த வேகத்திலேயே மேலே செல்வதும், பின் கீழே குதிப்பதுமாக அவர்கள் செய்யும் இந்த ‘ஸ்டண்ட்’ பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.
இத்தகைய அஜாக்கிரதையான செயல்கள் ஒரு நொடியில் உயிரையே பறிக்கக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.
ராட்டினத்தின் உள்ளே அமர்ந்து சுற்றுபவர்களை விட, வெளியே தொங்கிக்கொண்டு வித்தை காட்டும் இந்த இளைஞர்களே உண்மையான ‘திரில்’ அனுபவத்தைப் பெறுகிறார்கள் என்று சிலர் கிண்டலாகக் கூறினாலும், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தானது என்பதே பலரின் எச்சரிக்கையாக உள்ளது.
வேடிக்கைக்காக உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய செயல்களைத் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.
