ஆந்திர மாநிலம் கர்னூல் அசோக் நகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பினார். அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மின் கம்பம் ஒன்றின் அடியில் பள்ளம் தோண்டப்பட்டதால் அது பலவீனமடைந்தது.
சிறுவன் அந்த இடத்தைக் கடக்க முயன்றபோது, திடீரென அந்த மின் கம்பம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது மின்சாரக் கம்பிகள் அவன் அருகில் விழுந்தன. எதார்த்தமாகச் சிறுவன் பின்வாங்கவே, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தொழில்துறை அமைச்சர் டி.ஜி.பரத், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், பணியின் போது கவனக்குறைவாக இருந்த இரண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு பணிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்தச் சம்பவம் அதிகாரிகளிடையே மீண்டும் ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
