அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தனக்குச் செங்கோட்டையனை 30 வருடங்களாகத் தெரியும் என்றும், அவரை முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் “எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே” என்று வருத்தப்படுவதாகவும் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.