மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை லிப்ட் பெண் ஊழியர் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளிர் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் வர்ஷா சோனி என்ற ஊழியர் லிப்ட்டில் சென்றபோது, முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின்போது சுமார் பத்து நிமிடங்கள் அந்தப் பெண் உதவிக்கு எவருமின்றி தவித்ததும், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களின் அலட்சியமுமே இதற்குக் காரணம் என்றும் சக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதிய சட்டத் திருத்தங்களின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டிருப்பதே நகரில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயர்தர மருத்துவமனையிலேயே ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.