ஆப்பிரிக்காவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் முதல்முறையாக கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது காட்டிய எதிர்வினை, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நவீன உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழும் இந்தப் பழங்குடியினருக்கு, கண்ணாடி என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், தன் முன்னால் இருக்கும் கண்ணாடியில் தெரிவது தனது உருவம் தான் என்று தெரியாமல் அந்த இளைஞர் மிரண்டு போய் பின்வாங்குகிறார்.

பயத்தில் தன் கைகளால் முகத்தை மூடிக்கொள்ளும் அவரது அந்த அப்பாவித்தனமான செயல், பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. நமக்கு சாதாரணமாகத் தோன்றும் கண்ணாடி, மொபைல், இன்டர்நெட் போன்ற வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு உலகத்தில் அந்த மக்கள் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த லட்சக்கணக்கான மக்கள், “அவரைப் பயமுறுத்தாதீர்கள், கண்ணாடியை எடுத்து விடுங்கள்” என்றும், “அப்பாவித்தனத்தின் உச்சம் இது” என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vinod kumar (@roamingvinu)

“>

நாகரிகம் அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் நாம், இன்னும் ஒரு சாரார் அடிப்படைத் தொழில்நுட்பங்கள் கூடத் தெரியாமல் எவ்வளவு எளிமையாக வாழ்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.