சுவிட்சர்லாந்தில்‌ நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் பகிர்ந்த இந்த வீடியோவில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சருடன் ஆசிம் முனீர் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் ஒரு விசித்திரமான தடிமன் தெரிவதைக் கவனித்த சமூக வலைதளவாசிகள், அவர் கோட்டிற்குள் குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருப்பதாகக் கூறி விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வீடியோவை வைத்துப் பலரும் ஆசிம் முனீரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். “இவர் தனது உயிருக்கு இவ்வளவு பயப்படுகிறாரா?” என்றும், “யாராவது தலையில் சுட்டால் கவச உடை என்ன செய்யும், அதற்குப் பதில் ஹெல்மெட் அணிந்திருக்கலாமே” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் ராணுவத் தளபதி பாதுகாப்பு கவசத்துடன் காட்சியளிப்பதாக எழுந்துள்ள இந்த விவாதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.