​”ஜென்டில்மேன்” அஜித் ரசிகர்கள் செய்வது இதுதானா? என்ற கேள்வியுடன் ஒரு பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்கிற்கு வந்த இளைஞர் ஒருவர், தனது உடலில் சரவெடியைச் சுற்றிக்கொண்டு, அதன் மேல் ஆடை அணிந்து மறைத்துக்கொண்டு தியேட்டருக்குள் சென்றுள்ளார். படம் ஓடிக்கொண்டிருந்த அந்த இருட்டில், திடீரென அந்தப் பட்டாசுகளைக் கொளுத்தி அங்கு அமர்ந்திருந்த அப்பாவி மக்கள் மற்றும் மற்ற ரசிகர்கள் மத்தியில் வீசி விளையாடியுள்ளார். இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைத் துளிகூட உணராமல் அவர் செய்த இந்தச் செயல், தியேட்டரில் இருந்தவர்களை நிலைகுலைந்து போகச் செய்துள்ளது.

​பட்டாசு வெடித்து யாராவது உயிரிழந்தாலோ அல்லது தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டாலோ அதற்கு யார் பொறுப்பு? இது போன்ற “தற்கொலை முயற்சி” மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்கள் அஜித்தின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். “அஜித் சொல்லிக் கொடுத்தது இதையா? ரசிகர்கள் என்ற பெயரில் இப்படிப்பட்ட முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து, அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இணையதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.