“இப்படி ஒரு நிலைமை உலகத்துல எந்த ஒரு தகப்பனுக்கும் வரக்கூடாது சாமி…” – நெஞ்சை பிளக்கும் இந்தத் துயரச் சம்பவம், நீட் தேர்வு மையத்தின் வாசலில் அரங்கேறியுள்ளது. தன் மகள் எப்படியாவது மருத்துவராகிவிட மாட்டாளா என்ற ஏக்கத்தோடு, இரவு பகலாக அவளைப் படிக்க வைத்து, தேர்வு மையத்திற்கு அழைத்து வந்திருந்தார் அந்த ஏழைத் தந்தை.
ஆனால், விதியின் சதியால் தேர்வு மையத்திற்கு வர வெறும் 2 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. “ஐயா, வண்டி பஞ்சர் ஆயிடுச்சு… என் பொண்ணோட வாழ்க்கையே போயிடும், உள்ள விடுங்கையா” என்று அந்தத் தந்தை கதறியும், அதிகாரிகள் எவ்வித இரக்கமுமின்றி இரும்புத் கதவுகளைப் பூட்டினர்.
VIDEO: “अशी वेळ कोणत्याच बापावर येऊ नये” नीट परीक्षेला २ मिनिट उशीर झाला अन् मुलीला प्रवेश नाकारला; बापाची अवस्था पाहून धक्का बसेल https://t.co/9LvIakmpAo via @loksattalive
“>
அதோடு தன் மகளின் ஓராண்டு உழைப்பும், அவளது எதிர்காலக் கனவும் தன் கண் முன்னாலேயே கருகிப் போவதை அந்தத் தந்தையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேர்வு மைய வாசலிலேயே மண்டியிட்டு, கைகளைக் கூப்பி, அதிகாரிகளிடம் அவர் பிச்சைக் கேட்காத குறையாகக் கெஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது.
இந்நிலையில் எத்தனையோ பேர் பரிந்து பேசியும், “விதிமுறை தான் முக்கியம்” என்று அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். ஒரு தந்தையின் இந்த தீராத துயரமும், அந்த மாணவியின் கண்ணீரும் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் உலுக்கி எடுத்து வருகிறது. ‘விதிமுறைகள் மனிதர்களுக்காகவா… அல்லது மனிதர்கள் விதிமுறைகளுக்காகவா?’ என்ற விவாதம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
