உத்தரப்பிரதேசத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன் ஒருவன், பேருந்திலிருந்து இறங்கும்போது அவனது ஸ்கூல் பேக் பேருந்தின் கதவில் சிக்கிக்கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்க, சிறுவன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டான். சுற்றி இருந்தவர்கள் கூச்சலிட்டும், ஓட்டுநர் உடனடியாக நிறுத்தாதது அங்கிருந்தவர்களை உறைய வைத்தது. இறுதியில் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்தச் சிறுவன், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான்.
இந்தக் கோரமான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓட்டுநர்களின் கவனக்குறைவும், அவசரமும் ஒரு பிஞ்சுயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றது கண்டிக்கத்தக்கது.
School bus horror: Driver drags child for 1,000 ft with backpack stuck pic.twitter.com/6EZTrEvP1W
— news for you (@newsforyou36351) January 25, 2026
“>
இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் தங்களது வாகன ஓட்டுநர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதோடு, மாணவர்கள் பாதுகாப்பாக இறங்குவதை உறுதி செய்ய ஒரு உதவியாளரை நியமிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இத்தகைய சூழல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
