தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி முழக்கம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் சங்கமம், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் இருந்து மக்கள் விடுபட விரும்புவதாகவும், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களோடு தமிழகம் கைகோர்க்கும் காலம் கனிந்துவிட்டதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
திமுக அரசை ‘தீயசக்தி’ என விமர்சித்துள்ள அவர், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத, ஒளிமயமான தமிழகத்தை உருவாக்க இந்தப் படை திரண்டுள்ளதாகவும், இந்த வெற்றியை இனி யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
