டெல்லியிலிருந்து புனேவிற்கு ரயிலில் தனியாகப் பயணம் செய்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கு, சக பயணி ஒருவரால் நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை குறித்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுமார் 32 மணி நேரப் பயணத்தின்போது, அந்த நபர் அப்பெண்ணை அநாகரீகமாக முறைத்துப் பார்த்ததுடன், தேவையற்ற சைகைகளையும் செய்து அச்சுறுத்தியுள்ளார்.

Had a creep encounter
byu/Technical-Rent-5999 inindianrailways

இது குறித்து அப்பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தும், அவர்கள் பயத்தின் காரணமாக அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தனது பாதுகாப்புக் கருதி அந்த நபர் தன்னை முறைக்கும் காட்சிகளைப் படம் பிடித்த அந்த இளம்பெண், இதனைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கோரியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பலரும், ரயிலில் இது போன்ற அத்துமீறல்கள் நடந்தால் அமைதியாக இருக்கக் கூடாது என்றும், உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையின் 139 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவோ அல்லது பிரத்யேகச் செயலி மூலம் புகார் அளிக்கவோ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.