பேருந்து பயணங்களின் போது நாம் செய்யும் மிகச்சிறிய அலட்சியம் கூட எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு நபர் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு, தனது கையை வெளியே நீட்டியபடி பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்து அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பத்தில் அவரது கை பலமாக மோதியது. அந்த வேகத்தில் அவரது கை நொடிப்பொழுதில் துண்டு துண்டாக உடைந்து தொங்கியது. வலியால் அவர் அலறியதுடன், கை வளைந்து போயிருந்த அந்த காட்சி பார்ப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பயணிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. “இனிமேல் கனவிலும் கையை வெளியே நீட்ட மாட்டோம்” என்று பலரும் பயத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். பேருந்து அல்லது இரயிலில் செல்லும்போது ஜன்னல் வழியே கையை நீட்டுவது, படிக்கட்டில் பயணம் செய்வது போன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும். ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் ஊனத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், பயணத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இந்த வீடியோ நமக்குச் சொல்லும் பாடம்.
