மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பிவாண்டி அருகே உள்ள சம்ருத்தி எக்ஸ்பிரஸ் வே சாலையில் ‘பஞ்சாபி கல்சா ஹோட்டல்’ என்கிற தாபா ஒன்று உள்ளது. இங்கு உணவருந்தச் சென்ற நரேந்தர் தோமர் என்ற இளைஞர், வெறும் 4 சப்பாத்திகளும் ஒரு கறியும் (Curry) சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்து பில் கேட்டபோது, 180 ரூபாய் என்று சொல்லவே அவர் அதிர்ச்சியடைந்தார். “இது ரொம்ப அதிகமா இருக்கே?” என்று உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியதோடு, அங்கிருந்த விலைப் பட்டியலைத் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
वीडियो बनाने वाले व्यक्ति का नाम Narender Tomar है..
यह घटना नासिक हाईवे पर स्थित एक ढाबे की है जहाँ वे खाना खाने गए थे
ढाबे में "4 रोटियाँ और आधी प्लेट सब्ज़ी ₹180" की दी जा रही थी खाना काफ़ी महँगा लगने पर नरेंद्र तोमर ने इसकी जानकारी देने के लिए वीडियो बनाना शुरू किया।वीडियो… pic.twitter.com/Xg6wvZ8VwU
— Zoya Khan (@Zoyakhan7025) January 20, 2026
விலை குறித்துக் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த தாபா உரிமையாளர் ‘பாபா’ மற்றும் அங்கிருந்த மற்றொரு ஊழியர் சேர்ந்து நரேந்தரை விபரீதமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோதே, நரேந்தரை கீழே தள்ளி சரமாரியாக மிதித்துள்ளனர். இந்த 44 செகண்ட் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சாப்பாட்டுக்குக் கொள்ளை லாபம் வச்சதுமில்லாம, அடிக்கவும் செய்வாங்களா?” என்று கொந்தளித்து வருகின்றனர்.
