இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ஹவுரா – காமாக்யா இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் செல்லப்பிராணிகளான நாய்களை அழைத்துச் செல்வதற்காக ‘டாக் பாக்ஸ்’ என்ற பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ரயிலின் உள்ளே கூண்டு போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக் பாக்ஸில், நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை வைக்க தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தங்கள் செல்லப்பிராணிகளுடன் இரவு நேரப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் உரிமையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த வசதி குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த முயற்சியைப் பாராட்டினாலும், மற்ற ரயில்களின் முதல் வகுப்புப் பெட்டிகளில் அனுமதிப்பது போல, நாய்களைத் தங்கள் அருகிலேயே அமர வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 16 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தானியங்கி கதவுகள் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by kailashi Yash Bajpai | travel | explore | Lucknow (@explorewithkailashi)

“>

செல்லப்பிராணிகளுக்கான இந்த புதிய வசதி, வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.