மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் சஞ்சீவனி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆஷிஷ் படேல் என்ற 40 வயது நபர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்தின் போது அனுஷ்கா குகா என்ற இளம் பெண் தனது தோழியுடன் காரை ஓட்டிச் சென்ற நிலையில், வாகனத்தின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Jabalpur woman rams speeding car into 40-year-old passerby, leaves him critical#MadhyaPradesh | #MPNews | #FreePressMP pic.twitter.com/jhFqWEipUm
— Free Press Madhya Pradesh (@FreePressMP) January 21, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அதிவேகப் பயணத்தைத் தவிர்க்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
