ஜோமாட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இத்தகைய வேலைகளில் ஒரு குறிப்பிட்ட ஊதியம் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படும் நிலையில், இந்த நபர் தனது கடின உழைப்பு மற்றும் நேர மேலாண்மை மூலம் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியுள்ளார்.

ஒரு மாதத்தில் 28 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்து, சுமார் 1,200-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை டெலிவரி செய்ததன் மூலம் இந்த இலக்கை அவர் எட்டியதாகக் கூறப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து, நிறுவனத்தின் இன்சென்டிவ் மற்றும் வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ் ஆகியவை இவரது வருமானத்தை இந்த அளவிற்கு உயர்த்த முக்கியக் காரணமாக இருந்துள்ளன. இருப்பினும், இந்த வருமானத்தின் பின்னணியில் உள்ள கடும் உழைப்பையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tarun Malik (@tarunmalikx)

“>

மேலும் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்க அந்த ஊழியர் நாளொன்றுக்கு 14 முதல் 15 மணி நேரம் வரை இடைவிடாமல் உழைக்க வேண்டியிருந்தது. உணவு டெலிவரி செய்யும் துறையில் இது ஒரு சாதனை போலத் தெரிந்தாலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல் மற்றும் காலநிலைப் மாற்றங்களுக்கு இடையே தொடர்ந்து பயணிப்பது சவாலான காரியமாகும்.

இந்நிலையில் அதிக வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இது ஒரு உத்வேகமாக அமைந்தாலும், அதே நேரத்தில் இத்தகைய வேலையில் உள்ள உடல்நலச் சவால்கள் மற்றும் ஓய்வில்லாத உழைப்பு குறித்த விவாதங்களையும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.