பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் குடியிருப்புகளில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹெப்பகோடி பகுதியில் உள்ள வீடுகளின் மொட்டை மாடி மற்றும் முற்றங்களில் உலர வைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து மாயமாவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த ரோந்துப் படையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்த அமல் என் அஜி என்பது தெரியவந்தது.
அவரது செல்போனைச் சோதித்தபோது, திருடப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை அவர் அணிந்து கொண்டு பல்வேறு நிலைகளில் புகைப்படம் எடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அவரது அறையைச் சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து ஏராளமான பெண்களின் உள்ளாடைகளையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள ஹெப்பகோடி போலீசார், அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வினோத திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
