ராஜஸ்தானின் பாலைவன மணல் திட்டுக்களுக்கு இடையே அமர்ந்து, ‘மோர்சங்’ எனப்படும் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டும் காதா நாத் என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவன்ஷ் அலிஜர் என்ற டிஜிட்டல் படைப்பாளரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் வைரலாகியுள்ளது.

மேலும் பற்களுக்கும் உதடுகளுக்கும் இடையில் வைத்து மூச்சுக் காற்றின் மூலம் இசைக்கப்படும் இந்த சிறிய கருவியிலிருந்து வெளிவரும் வசீகரமான இசை, பார்ப்பவர்களை மந்திர முக்தராக்குகிறது. எந்தவித நவீன வசதிகளுமின்றி, இயற்கையான சூழலில் அவர் வெளிப்படுத்தும் இந்த அபூர்வக் கலைத்திறன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Devansh Alijar (@devanshalijar)

“>

இந்த வீடியோவின் வெற்றி, திறமைக்கு மொழி மற்றும் இட எல்லைகள் கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சுமார் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளதோடு, ராஜஸ்தானின் கலாச்சாரப் பெருமையை இது பறைசாற்றுவதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தேவன்ஷ் அலிஜர், காதா நாத் போன்ற மறைந்திருக்கும் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது தொடர்பு எண்ணையும் பகிர்ந்துள்ளார். நவீன இசையின் ஆதிக்கம் நிறைந்த இக்காலத்தில், மோர்சங் போன்ற தொன்மையான இசைக்கருவிகளும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்களும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த சான்றாகும்.