தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என முன்னதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவை வளாகத்திற்கு காலை 9.20 மணிக்கு வருகை தந்த ஆளுநர் ரவி தேசிய கீதம் தொடர்பான பிரச்சனை காரணமாக 9.37 மணிக்கு சபையை விட்டு வெளியேறினார்.

கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த முறையும் தமிழக அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளையும் மரபுகளையும் மீறி அவையில் இருந்த ஆளுநர் ரவி வெளியேறியுள்ளார் என கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அதே நிலையில் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை படித்ததாக தற்போது சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அச்சிட்டு வழங்கிய உரை மட்டுமே பேரவை குறிப்பில் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.