சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 1280 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13610 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,847 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,33,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.