தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் இன்று முதல் நாளாக கூறியது. சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படாததாக கூறி வெளிநடப்பு செய்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் மீண்டும் ஒருமுறை மரபுகள் மற்றும் விதிகளை மீறி உள்ளதாக கூறினார்.

அதன் பிறகு ஆளுநர் உரையை படிக்காத நிலையில் அவர் உரையைப் படித்ததாக கூறி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக குரல் எழுப்பி அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அதிமுகவினர் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.