திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
வேலூரில் வேலை பார்த்து வந்த ராதிகாவின் தம்பி கண்ணன், பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.
அக்காவைக் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காமல் தொடர்ந்து அந்த உறவினருடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கண்ணன், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகாவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின் தம்பி கண்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
