கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான புகாரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை முடிந்து அவர் சென்னை திரும்பியிருந்த நிலையில், இன்று (ஜனவரி 19) மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக நேற்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று நடைபெறும் இந்த இரண்டாம் கட்ட விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் அவரிடம் பல்வேறு முக்கியமான கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற உள்ளனர். இந்தத் தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
