பம்பிள் (Bumble) செயலி மூலம் அறிமுகமாகி பழகி வந்த ஒரு ஜோடி, தங்களுக்குள் இருந்த நெருக்கத்தின் காரணமாக ஓயோ (OYO) விடுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்ற மறுநாளே அந்தப் பெண் அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை (Rape Case) புகார் அளித்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தையும், அடுத்த நாளே கொடுக்கப்பட்ட புகாரையும் கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

​இருவரும் சம்மதத்துடன் விடுதிக்குச் சென்ற நிலையில், திடீரென ஒரு நாளில் எல்லாம் தலைகீழாக மாறி புகார் அளிக்கப்பட்ட விதம் நீதிபதியையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் உறவுகளைப் பிறகு குற்றச்சாட்டுகளாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியையும், ஆன்லைன் மூலம் பழகுபவர்களிடம் மிகக் கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதையும் இந்த வழக்கு உணர்த்துகிறது.