தூத்துக்குடிக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், இரவில் பொழுதைப் போக்க ‘நைட் கிளப்’ எங்கே இருக்கிறது என்று கூகுளில் தேடியுள்ளார். அப்போது கூகுள் காட்டிய நான்கு இடங்களுக்கும் அவர் சென்றார். ஆனால், அந்த நான்கு இடங்களுமே மது விடுதிகள் அல்ல, அவை அனைத்தும் தூத்துக்குடியின் புகழ்பெற்ற பரோட்டா கடைகள்.
ஏமாற்றத்துடன் நான்காவதாகக் காட்டிய ஹோட்டலுக்குச் சென்ற அந்த வெளிநாட்டவர், அங்கிருந்த பரோட்டா மற்றும் சிக்கனைச் சாப்பிட்டுப் பார்த்தார். அதன் சுவையில் மயங்கிய அவர், “நான் தேடி வந்த நைட் கிளப்பை விட இந்த பரோட்டா மற்றும் சிக்கன் தான் மிகவும் அருமையாக இருக்கிறது” என்று பாராட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி நைட் க்ளப்ஸ்.பேர மாத்தி உடுங்கய்யா pic.twitter.com/Tejb26GuYZ
— உளவாளி (@withkaran) January 18, 2026
தூத்துக்குடியில் இரவு நேரங்களில் செயல்படும் உணவகங்களுக்கு ‘நைட் கிளப்’ என்று பெயரிடும் வழக்கத்தை அந்த வெளிநாட்டவர் ரசித்த விதம் பலரையும் கவர்ந்துள்ளது.
