கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் எமனவ்வா, அதே கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான ஸ்ரீசைலா பட்டீல் என்பவருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் எமனவ்வா அந்த உறவைக் கைவிட்டுவிட்டு, 27 வயதான வேறொரு இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலா பட்டீல், கடந்த 14-ஆம் தேதி தனது தோட்டத்து வீட்டிற்கு வந்த எமனவ்வாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், எமனவ்வா மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊர் மக்களிடம் கூறி ஸ்ரீசைலா பட்டீல் நாடகமாடியுள்ளார். ஆனால், உடற்கூறாய்வு முடிவில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து ஜமகண்டி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீசைலா பட்டீல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
