பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், தன் கணவருடன் இணைந்து ஒரு தனியார் பள்ளியை நடத்தி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, கடன் சுமை காரணமாக அந்தப் பள்ளியை முகமது ஹனிப் என்பவருக்கு அவரது கணவர் விற்றுவிட்டார்.

தனது பள்ளியை மீண்டும் மீட்க விரும்பிய அந்தப் பெண், அதற்காக முகமது ஹனிப்பிடம் 16 லட்சம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில், பள்ளியைத் திரும்பத் தர வேண்டுமானால் தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு மதம் மாற வேண்டும் என்றும் முகமது ஹனிப் அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

இதனை அந்தப் பெண் மறுத்து வந்த நிலையில், அலுவலகத்திற்குச் சென்ற அவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து முகமது ஹனிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியும் அவர் அவமானப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பேடராயனபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ஹனிப்பைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணப் பரிமாற்றம் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பான விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.