சமூக வலைதளங்களில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுத் தங்களது உயிரைப் பணையம் வைக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் இளைஞர் ஒருவர் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதையும், திடீரென முன்பக்கச் சக்கரத்தைத் தூக்கி ஸ்டண்ட் செய்ய முயலும்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து இழுத்துச் செல்லப்படுவதையும் காண முடிகிறது.
1M view पाने के लिए विडियो बनाया था,
अब 2M पहोंच गया है 😂😂 pic.twitter.com/nEal9nyzzr— TANVEER (@mdtanveer87) January 17, 2026
அதிர்ஷ்டவசமாக அந்தத் தருணத்தில் பின்னால் வேறு எந்த வாகனமும் வராததால் அவர் பெரும் உயிர்ச் சேதத்திலிருந்து தப்பினாலும், இத்தகைய கவனக்குறைவான செயல்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் எச்சரித்து வருகின்றனர்.
ஒரு மில்லியன் பார்வைகளுக்காகத் தொடங்கப்பட்ட இந்த வீடியோ, தற்போது இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், இளைஞர்கள் இதுபோன்ற விபரீத ஸ்டண்ட்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
