தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அதிரடி கிளப்பியுள்ளார். “நாங்க ஆட்சிக்கு வந்தா இதெல்லாம் நடக்கும்” என அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள், குறிப்பாக சாமானிய மக்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்துத் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்கான ‘குலவிளக்கு’ திட்டம் மூலம் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தற்போதைய மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

வீடில்லாதவர்களுக்கு ‘அம்மா குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் மனை வழங்கி வீடு கட்டித் தருவது, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் எனப் பல கவர்ச்சிகரமான திட்டங்களை ஈபிஎஸ் அறிவித்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், பெண்களைத் தொடர்ந்து ஆண்களுக்கும் பேருந்து பயணம் இலவசம் என்ற அறிவிப்புதான். இதுதவிர, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என அவர் கூறியிருப்பது, டெல்டா மற்றும் தென் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.