தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே புகைந்து கொண்டிருந்த பனிப்போர் டெல்லி தலைமை வரை எட்டி, மேலிடத்தை செம அப்செட் ஆக்கியிருந்தது. “இப்படியே போனா சரிவராது” என முடிவெடுத்த டெல்லி பாஜக, இருவரையும் அழைத்து பஞ்சாயத்து செய்துள்ளது. தலைமையின் அட்வைஸை ஏற்று அண்ணாமலை சற்று இறங்கி வர, அவருக்குப் பரிசாக ஒரு பெரிய தேசிய அளவிலான பதவியைக் கொடுக்க பாஜக பிளான் போட்டுள்ளதாம். அண்ணாமலையின் அதிரடி பேச்சும், வேகமும் கட்சிக்குத் தேவை என்பதால் அவருக்கு இந்த முக்கியத்துவம் தரப்படுவதாகத் தெரிகிறது.
வெறுமனே பதவி மட்டும் கொடுக்காமல், வரும் தேர்தல்களில் அண்ணாமலையை ஒரு ‘பிரசார பீரங்கியாக’ மாநிலம் முழுவதும் சுழன்று வர வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அண்ணாமலையின் பிரசாரம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதால், அவரை முழுமையாகத் தேர்தல் களத்தில் பயன்படுத்த மேலிடம் கணக்குப் போட்டுள்ளது. “பழைய கசப்புகளை மறந்துட்டு வேலையைப் பாருங்க” என டெல்லி கொடுத்த அசைன்மென்ட், தமிழக பாஜகவில் ஒரு புதிய அலைச்சலை உண்டாக்கியுள்ளது.
