ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு கலை நிகழ்ச்சியில் பணிபுரிய அதிக ஊதியம் தருவதாகக் கூறி கரண் சிங் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை மும்பையிலிருந்து உதயப்பூருக்கு வரவழைத்துள்ளார்.

மேலும் அங்கு சென்ற அந்தப் பெண்ணை ஒரு பண்ணை வீட்டில் சுமார் 10 நாட்கள் அடைத்து வைத்து, கரண் சிங் மற்றும் அவரது நண்பர்களான ஹித்தேஷ், பூரா ஆகிய மூவரும் அவருக்கு மதுவைக் கட்டாயப்படுத்திப் புகட்டி, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து சுகேர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கரண் சிங் என்ற இளைஞரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இரு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மீண்டும் சமூக அக்கறையைத் தூண்டியுள்ளது. போலீஸார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.