டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பின்னால் இருந்து காலால் எட்டி உதைக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டமாக இருக்கும் அந்த ரயிலில், திடீரென அந்த பெண் உதைத்ததால் முன்னால் நின்றவர் நிலைகுலைந்து கீழே விழப் போனார்.

நல்லவேளையாக அவர் சுதாரித்துக் கொண்டு விழுவதைத் தவிர்த்தார். ஆனால், இந்த ஆபத்தான செயலைச் செய்த அந்த பெண், வருத்தப்படுவதற்குப் பதிலாக அதை ஒரு விளையாட்டு போல நினைத்துச் சிரிப்பது பார்ப்பவர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.

இதுபோன்ற பொது இடங்களில் நடக்கும் முட்டாள்தனமான செயல்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“இது விளையாட்டல்ல, சுத்த முட்டாள்தனம்; அவர் கீழே விழுந்து அடிபட்டிருந்தால் யார் பொறுப்பு?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“>

 

இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது டெல்லி மெட்ரோ நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் யாரும் இது போன்ற ஆபத்தான காரியங்களைச் செய்யத் துணிய மாட்டார்கள் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.