இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள 25 வயதான ஈனஸ் ஃபாரியா என்ற வெளிநாட்டுப் பெண், இந்திய ரயிலில் பயணம் செய்த தனது அனுபவத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இரவு நேர ரயில் பயணம் என்றாலே குழப்பமாகவும், அசுத்தமாகவும் இருக்கும் என்று அவர் முதலில் பயந்திருக்கிறார்.
ஆனால், ரயிலில் வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் மிகவும் சுத்தமாக இருந்ததையும், கழிவறைகள் அவர் எதிர்பார்த்ததை விடப் பராமரிப்பாக இருந்ததையும் கண்டு அவர் வியந்துபோனார்.
“தேவையில்லாமல் அதிகமாகக் கவலைப்பட்டுவிட்டேன், இந்திய ரயிலில் பயணம் செய்தது ஒரு சிறந்த அனுபவம்” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரயிலில் சக பயணிகள் மிகவும் அமைதியாகவும், மரியாதையுடனும் நடந்துகொண்டது தனக்கு நிம்மதியான உறக்கத்தைத் தந்ததாக ஈனஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல இந்திய இணையவாசிகள் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
“இந்தியாவை ரசித்துப் பயணம் செய்யுங்கள், முடிந்தால் வந்தே பாரத் ரயிலிலும் முயற்சி செய்து பாருங்கள்” எனப் பலரும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
View this post on Instagram
“>
குழப்பங்களும் நெரிசல்களும் இருந்தாலும், இந்திய மக்களின் அன்பும் உபசரிப்பும் அவருக்கு ஒரு மறக்கமுடியாத பயண அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
