இயக்குநர் மற்றும் படக்குழுவினர் தங்களது ‘ஜன நாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை (SC) அணுகியிருந்தனர். ஏற்கனவே தனி நீதிபதி கொடுத்த உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. “இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது, நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தையே மீண்டும் அணுகுங்கள்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தாலும், ஒரு முக்கியமான கட்டளையைப் பிறப்பித்துள்ளது. வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் இந்தச் சென்சார் விவகாரத்தை விசாரித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி 20-ம் தேதி ‘ஜன நாயகன்’ படத்திற்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
