‘போர் தொழில்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்திற்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. இது ஒரு எமோஷனல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. தனுஷின் அசாத்திய நடிப்பும், விக்னேஷ் ராஜாவின் விறுவிறுப்பான திரைக்கதையும் சேர்ந்து ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக, ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி திரையில் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது. மேலும், படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பது கூடுதல் பலம்! படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறைக்கு (Summer Release) ‘கர’ திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்மர் தனுஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்
